Wednesday, 1 February 2017

இந்தக்காலம்..

வியர்வை வரும் வரை விளையாடுவது அந்த காலம்...
சார்ஜ் தீரும் வரை விளையாடுவது இந்த காலம்....!!

Tuesday, 31 January 2017

பல் டாக்டர்..

ஒரு பல் மருத்துவமனையில்...

பெண்: டாக்டர்..ஒரு பல் புடுங்க எவ்வளோ செலவாகும்?

டாக்டர்: 850 ரூபாய் ஆகும் மேடம்.

பெண்: 850-ஆ..ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறைசிக்க கூடாதா??

டாக்டர்: இது வழக்கமா வாங்குறது தான்..

பெண்: அனஸ்தீஷ்யா கொடுக்காம கொடுத்தா எவ்வளவு ஆகும்..??

டாக்டர்: அப்படி செய்ய முடியாது... ரொம்ப வலிக்கும்...

பெண்: பராவாயில்ல..சொல்லுங்க.

டாக்டர்: அப்படி செய்யறதா இருந்தா 400 ரூபாய் ஆகும்..

பெண்: ஓ ...  உங்க ஜூனியர் யாரைவாது,ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும்.??

டாக்டர்: அதுல தொழில் நேர்த்தி இருக்காது. என்ன ஆனாலும் நான் பொறுப்பல்ல..

பெண்: பராவாயில்ல..

டாக்டர்: அதுக்கு 200 ரூபாய் ஆகும்..

பெண்: உங்க மருத்துவமனையில படிக்கிற பிள்ளையை பக்கத்தில வைச்சிகிட்டு அவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு,  உங்க ஜூனியர் யாரைவாது வைச்சி, ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும் டாக்டர்???

டாக்டர்: குட்...ஒண்ணும் வேண்டா.. அப்போ நான்தான் உங்களுக்கு 200 ரூபாய் தரனும்...

பெண்: அப்படியா.. ரொம்ப நல்லது.. நாளைக்கு என் கணவரை பல் புடுங்க கூட்டிட்டு வரலாம்ல...???

டாக்டர்: ????????